சிவன் கோயில், வைகுண்டபதி பெருமாள் கோயிலில் பக்தர்கள் வருகைக்கு தடை : தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் மூலம் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், தூத்துக்குடி சிவன் கோயில், வைகுண்டபதி பெருமாள் கோயிலில் பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், கோயில் நடை திறந்திருக்கும் என்றும், பக்தர்கள் வெளியே நின்று சாமி தரிசனம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.