கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கையாக அனைத்து முகாம் மற்றும் கூட்டங்களும் நிறுத்தம் : மாவட்ட ஆட்சியர்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள் கிழமை அன்று மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மாதம் தோறும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் கிராமப்பகுதிகளில் நடைபெறும் மக்கள் தொடர்பு திட்ட முகாம் மற்றும் அம்மா திட்ட முகாம்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் போன்றவைகள் கொரானா வைரஸ் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை காரணமாக 31.03.20 வரை நிறுத்தி வைக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் அவசரமான கோரிக்கை மனுக்கள் குறித்த விவரங்களை collrtut@nic.in என்னும் இணைய தள முகவரியில் அல்லது call your collector WhatsApp number 8680800900 என்னும் எண்ணிற்கு WhatsApp மூலம் அல்லது 0461-2340101 என்ற தொலைபேசியில் ஐயோ தெரிவிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் தெரிவித்துள்ளார்.