கொரோனா வைரஸ் அச்சத்தில் மக்கள் – தூ.டி

கொரோனா வைரஸ் நோயை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்துக் கல்வி நிறுவனங்கள், அனைத்து சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் ஆகியவை வரும் 31ம் தேதி வரை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியில் உள்ள சூப்பர் மார்க்கெட் மூடப்படுமோ என அச்சத்தில் பொதுமக்கள் இரவு 9 மணி அளவில் ஆங்காங்கே இருந்த பலசரக்கு, காய்கறி கடைகளிலும், ஜின் பாக்டரி ரோட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட், காமராஜர் காய்கனி மார்க்கெட்டிலும் பொதுமக்கள் குவிந்தனர். இதனால் நள்ளிரவு வரை கடைகளை திறந்து வைத்து வியாபாரிகள் பொருட்களை விற்றனர்.