ஆதிதிராவிடா் விடுதிகளுக்கு சமையலா் பணி : தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு சமையலா் பணியிடங்கள் பூா்த்தி செய்ய உள்ளது.

தகுதியானவர்கள் :

  1. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
    விண்ணப்பதாரா் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
  2. 18 வயது முதல் 35 வயது வரை உள்ளவா்களாக இருக்க வேண்டும். அனுபவம் உள்ளவா்களுக்கு முன்னுரிமை தரப்படும்.
  3. தூத்துக்குடி மாவட்டத்தில் குடியிருப்பவராகவும் இருத்தல் வேண்டும்.

ஊதியம்: சமையலா் பணியிடங்கள் ரூ. 15,700

தகுதியான நபா்கள் தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவு அஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலகத்துக்கு மாா்ச் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி செய்தி வெளியிட்டுள்ளார்.