மாஸ்டர் படத்தின் புதிய போஸ்டரால் சர்ச்சை

விஜயின் ஒவ்வொரு படத்திற்கும் ஏதாவது ஒரு பிரச்னை வந்து கொண்டேதான் இருக்கிறது. இவை தானாக வருகிறதா? அல்லது வரவைக்க படுகிறதா? என்று தெரியவில்லை. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இப்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள மாஸ்டர் படத்தின் போஸ்டரில் விஜய் தனது கையில் மது பாட்டிலை வைத்திருக்கிறார். காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு எதோ இசையை கேட்டபடி சாய்ந்திருக்கிறார். ‘ஒரு குட்டிகத சொல்லட்டுமா’ என்ற பாடல் வெளியீட்டிற்கான இந்த போஸ்டரில் விஜய் கையில் மது பாட்டில் வைத்திருப்பது மறுபடியும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.