குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை தொடர் தர்ணா போராட்டம்

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை சார்பில், முஸ்லிம் ஐக்கிய பேரவை தலைவர் அபுல் ஹசன் கலாமி தலைமையில் காயல்பட்டினம் எல்.எப். ரோடு பகுதியில் தொடர் தர்ணா போராட்டம் தொடங்கியது. போராட்டத்தில் பேரவை துணை தலைவர் பாதுல் அஸ்ஹப், அல்ஜாமிஉல் அஸ்ஹப் ஜூம்ஆ பள்ளிவாசல் கத்திபு அப்துல் மஜித் ஆலிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் மாநில காங்கிரஸ் துணை தலைவர் ஏ.பி.சி.வி.சண்முகம், பேரவை செயலாளர் வாவு சம்சுதீன், துணை செயலாளர் நவாஸ் மற்றும் ஜமாத் நிர்வாகிகள், அனைத்து கட்சி பிரமுகர்கள் உள்பட திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். மத்திய அரசின் குடியுரிமை திருத்தை திரும்பெறும் வரை தினமும் மாலை முதல் இரவு வரையிலும் தொடர் தர்ணா போராட்டம் நடைபெறும் என்று முஸ்லிம் ஐக்கிய பேரவை நிர்வாகிகள் தெரிவித்தனர்.