தொடரும் தங்கம் பறிமுதல் – சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் நேற்று 87.5 லட்சம் மதிப்புள்ள இரண்டரை கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது . மேலும் அது தொடர்பாக 7 பேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வரும் நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் பயணிகளை சோதனை செய்யும், பன்னாட்டு விமான நிலைய சுங்க சோதனை பகுதியில் ஒரு பையில் சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கம் யாருமின்றி கேட்பாராற்ற நிலையில் இருந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  இதுதொடர்பாக சிசிடிவி கேமரா மூலம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.