தொடர்ந்து 6வது கட்ட கொரோனா நிவாரண பணி

உதவி ஆய்வாளர் வேல்ராஜ் அவர்களும் , கூடை பந்து கழக மூத்த பயிற்சியாளர் சத்திய சங்கர் அவர்களும் இணைந்து தொடங்கிய 6வது கட்ட மக்கள் பணி.

குடிமை பொருள் உணவு பாதுகாப்பு தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் அவர்கள் தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நாள் முதல் தூத்துக்குடியில் வசிக்கும் ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை , தனது நண்பர்களின் நிதி உதவியைக் கொண்டு செய்து வருகிறார். இந்த உதவிகளை தன்னார்வலர்களை கொண்டு ஒவ்வொரு பகுதி வாரியாக கணக்கெடுப்பு செய்து அதன் பின் அவர்களுக்கு அரிசி , காய்கறிகள் , மசாலா சாமான்கள் என ஒவ்வொரு குடும்பத்தின் தேவைக்கேற்ப தினமும் 50 நபர்களுக்கு வழங்கியும் வருகிறார்.

இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் அவர்களுடன்
கூடைபந்து மூத்த பயிற்சியாளர் திரு. சத்திய சங்கர் அவர்களும் ஒன்றிணைந்து , இன்று (11-05-2020) இஞ்ஞாசியர்புரம் பகுதியில் உள்ள St. தாமஸ் ஆங்கிலப் பள்ளியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் , வாகன ஓட்டுநர்கள் , காவல் பணியாளர்கள் , தோட்ட பணியாளர்கள் உள்பட்ட அனைவருக்கும் உணவு பொருட்களை வழங்கினார்கள்.

பள்ளி வளாகத்திற்குள் நடைபெற்ற இந் நிகழ்வை பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு. ஆஸ்கர் அவர்கள் தலைமையேற்று தொடங்கி வைத்தார்கள். அதன் பின் பள்ளி முதல்வருடன் இணைந்து உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் அவர்களும் , பள்ளியின் ஒருங்கிணைப்பாளர்
திருமதி. சிரானி அவர்களும் சமூக இடைவெளியை பின்பற்றி , அரசு அறிவித்துள்ள விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு தொழிலாளர்களுக்கான உணவு பொருட்களை வழங்கி சிறப்பித்தார்கள்.

இந்நிகழ்வின் போது St. தாமஸ் பள்ளியின் பராமரிப்பு மேலாளர் திரு. லிட்டன் அவர்கள் , கூடை பந்து பயிற்சியாளர் திரு. பொன்மாரியப்பன் அவர்களும் உடனிருந்தனர். உணவு பொருட்களை பெற்றுக் கொண்ட தொழிலாளர்கள் அனைவரும் உதவி செய்த கூடை பந்து மூத்த பயிற்சியாளர் சத்திய சங்கர் அவர்களுக்கும் , உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் அவர்களுக்கும் தங்களுடைய நன்றியை ஒருவருக்கொருவர் தனித்தனியே தெரிவித்து கொண்டனர்.