சினிமா டிக்கெட் ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசனை கூட்டம் – சென்னை

சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. கடம்பூர் ராஜு அவர்கள் தலைமையில் சினிமா டிக்கெட் ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்வது தொடர்பாக 2ம் கட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாகடர்.நிரஞ்சன் மார்டி, இ.ஆ.ப உறுப்பினர் செயலாளர், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முனைவர் நா.கார்த்திக்கேயன், இ .ஆ .ப, அரசு முதன்மைச் செயலாளர், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித் துறை திரு.ராஜேஷ் லக்காளி, இ.ஆ.ப, ஆணையர், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை திரு. சந்தோஷ் கே மிஷ்ரா, இ.ஆ.ப, அரசு முதன்மை செயலாளர், வணிக வரித்துறை, திரு.கா.பாலச்சந்திரன், இ.ஆ.ப , தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் திரு.மகேசன் காசிராஜன் இ.ஆ.ப, செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் முனைவர் பொ. சங்கர் இ.ஆ.ப, நகர் ஊரமைப்புத் துறை இயக்குநர் , திரு.சந்திரசேகர் சாகமூரி, இ.ஆ.ப, கூடுதல் ஆணையர், நில நிர்வாகம் திருமதி ப.மகேஷ்வரி இ.ஆ.ப, திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் ஆகியோர் பங்கேற்றார்கள்