கரோனா பாதுகாப்பு உபகரணங்கள் தேவை குறித்து ஆலோசனை

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திருநெல்வேலி மண்டல கரோனா கண்காணிப்பு சிறப்பு அலுவலர் /கைத்தறி மற்றும் ஜவுளித் துறை இயக்குனர் முனைவர் மு.கருணாகரன் இ.ஆ.ப அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் கொரானா நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு தேவையான மாஸ்க், பரிசோதனை கிட்டுகள், உபகரணங்கள் கையிருப்பு உள்ளதா என்பதை குறித்து மருத்துவமனை முதல்வர் மரு. திருவாசகமணியிடம் ஆலோசனை மேற்கொண்டார்.

அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி, சிறப்பு காவல் அலுவலர் ஏடிஜிபி திரு மகேஷ்குமார் அகர்வால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன், மாநகராட்சி ஆணையர் திரு வீ. பி. ஜெயசீலன், தூத்துக்குடி சார் ஆட்சியர் திரு. சிம்ரோன் ஜீத் சிங் காலோன், உறைவிட மருத்துவர் மரு. சைலேஸ் ஜெபமணி ஆகியோர் உள்ளனர்.