கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்தும் விதமாக ஆலோசனை கூட்டம்: மாப்பிளையூரணி ஊராட்சி

மாப்பிளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்தும் விதமாக ஆலோசனை கூட்டம் நேற்று (10/07/2020) மாலை 5 மணியளவில் நடைபெற்றது

தூத்துக்குடி மாவட்டம் மாப்பிளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்தும் விதமாக மாப்பிளையூரணி ஊராட்சி மன்ற தலைவர் திரு. R. சரவணகுமார் மற்றும் சுகாதார ஆய்வாளர் திரு. வில்சன் அவர்கள் முன்னிலையில் மாப்பிளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட கடை உரிமையாளர்கள், வியாபாரி சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மேலும் இக்கூட்டத்தில் சமூக விலகல் மற்றும் முககவசம் அணிதல் போன்ற நடவடிக்கைகள் மேற்க்கொள்ள வலியுறுத்தப்பட்டது.