குரூப் 4 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலைக்கான கலந்தாய்வு

குரூப் 4 சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை III பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் ஏப்ரல் 2, 3, 4, 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி-யின் சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் விவரங்களை www.tnpsc.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.

இதனைத் தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டவர்களுக்குக் குறிப்பிட்ட நாளில், சென்னை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறும். இதற்கான தேதி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தினை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.