இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

உடன்குடி வட்டார, நகர காங்கிரஸ் சார்பாக கிறிஸ்தியாநகரம் அஞ்சலகம் முன்பு நேற்று காலை 10மணி அளவில் அடையாள எதிர்ப்பு போராட்டம் நடந்தது. வட்டார தலைவர் துரைராஜ் ஜோசப் தலைமை வகித்தார். நகர தலைவர் முத்து முன்னிலை வகித்தார்.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் இஸ்ரேல்ஜாண், தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் வழக்கறிஞர் தனிஷ் ஆகியோர் கலந்து கொண்டு சமூக இடைவெளியிட்டு கருப்பு பேட்ஜ் அணிந்து இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு பதாகை ஏந்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.