அபாய நிலையில் மின்கம்பம் -பழுது நீக்க கோரி புகார்

சாத்தான்குளம் நகரில் 9வது வார்டில் பண்டாரசெட்டிவிளை தெருவில் குடியிருப்பு வீடுகளும் மற்றும் அருகே நாராயண சுவாமி கோவில், உச்சினிமகாளியம்மன் உள்ளிட்ட கோவில்களும் உள்ளன.

இந்த கோவில் அருகே உள்ள சிமென்ட் மின்கம்பம் அடி பகுதியில் அரிக்கப்பட்டு கீழே விழும் அபாய நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் குடியிருப்பவர்களும், கோவிலுக்கு வரும் பக்தர்களும் பொpதும் அச்சம் அடைந்துள்ளனர். அபாய நிலையில் உள்ள மின்கம்பம் அருகில் அடிபம்பு உள்ளது. இந்த அடிபம்பில் தண்ணீர் பிடிக்க வரும் பெண்கள் மிகவும் பயந்து போய் உள்ளனர்.

அடியில் அரிக்கபட்ட நிலையில் உள்ள கீழே விழுந்து மின் விபத்து ஏற்பட்டு விடுமோ என அச்சமடைந்துள்ள குடியிருப்பு மக்கள் சம்பந்தபட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை. எனவே பழுதான மின் கம்பத்தை சம்பந்தபட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு கம்பத்தினை பழுது நீக்க கோரி அந்த தெரு பகுதிகளில் உள்ள மக்கள் மாவட்ட கலெக்டர் மற்றும் உயர் மின்வாரிய அதிகாரிகளுக்கு புகார் மனுக்கள் அனுப்பியுள்ளனர்.