தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி சார்பில் நடைபெற்ற சமூக மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சி…

தூத்துக்குடி மாவட்டம் பெரிய காயல் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி சார்பில் நடைபெற்ற சமூக மேம்பாட்டு திட்ட நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி இ.ஆ.ப., அவர்கள் வீட்டுத்தோட்டம் அமைப்பதை தொடங்கி வைத்தார். மற்றும் பிளாஸ்டிக் நெகிழிக்கு மாற்றாக துணிகளை வழங்கினார். அத்துடன் மழைநீர் சேகரிப்பு மாதிரி செயல் விளக்க அமைப்பினை பார்வையிட்டார். அருகில் தருவைகுளம் பங்குத்தந்தை அருட்தந்தை சகாயராஜ் ராயன், தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி UBA ஒருங்கிணைப்பாளர் முனைவர் அருட்சகோதரி குழந்தை தெரஸ் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

வீட்டுத்தோட்டம் அமைப்பதை தொடங்கி வைத்த போது
பிளாஸ்டிக் நெகிழிக்கு மாற்றாக துணிகளை வழங்கிய போது