முதல்வர் பழனிச்சாமி

த. நா முதல்வர் தூத்துக்குடிக்கு வருகை

வருகின்ற 22 ம் தேதி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி வருகிறார். இதனை முன்னிட்டு  தமிழக முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து அதிமுக தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இந்தக் கூட்டமானது செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக  செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்எல்ஏ ஆகியோரின் தலைமையில் பானுபிருந்தாவன் ஹோட்டலில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.