சிகிச்சை பெற்று வந்த மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார் – திருமதி P.கீதாஜீவன்

தூத்துக்குடி கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த திரு அல்பர்ட் மகன் பெர்க்மான்ஸ் (வயது 34 ) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த சின்ன வேல்ராஜ் (வயது 29 ) வினோத் (வயது 35) சிவன் ராஜ் (வயது 46) மற்றொரு வினோத் (வயது 33) அவர்களின் படகு கவிழ்ந்து நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 5 பேரையும் தருவைகுளம் மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர்.

பின்னர் அவர்கள் 5 பேரும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களை தூத்துக்குடி திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளரும் சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய திருமதி P.கீதாஜீவன் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். உடன் மாநகரச் செயலாளர் S.R. ஆனந்தசேகரன் அவர்களும் திரேஸ்புரம் பகுதி செயலாளர் திரு தொ.நிர்மல்ராஜ் மற்றும் அண்ணா நகர் பகுதி செயலாளர் திரு D.A. ரவீந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.