ஊரடங்கு உத்தரவினால் ஓவியரான கல்லூரி மாணவர்

தற்போது தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால், மக்கள் வீட்டில் பாதுகாப்பாக இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான மக்கள் வீட்டில் இருக்கும் போது தங்களுக்கு தெரிந்த திறமைகளை வெளிப்படுத்தி அதை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து வருகின்றனர். அதைப்போல் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சிபி ஆரோன். இவர் ஒரு கல்லூரி மாணவர் ஆவார். இவர் இதுவரை வரைபடம் வரைந்து பழக்கம் இல்லாதவர் முதல் முறையாக தனது வீட்டு சுவரில் வரைபடம் வரைந்து தனது குடும்பத்தினரை ஆச்சாியப்படுத்தியுள்ளார். ஊரடங்கு உத்தரவினால் இவருக்குள் இருந்த தனித்திறமை வெளியே தொிவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. ஊரடங்கு உத்தரவினால் ஓவியரான கல்லூரி மாணவருக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.