இன்னைக்கு லவ்வர்ஸ் டே காலேஜ் டைமிங் இதுதான்!!!

உலகமெங்கும் பிப்ரவரி 14 ஆம் தேதி காதலர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடலூரில் பாரதி சாலையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரி மாணவிகளின் பெற்றோர்களுக்கு காதலர் தினத்தை முன்னிட்டு மாணவிகளின் பாதுகாப்பை கருதி, தங்கள் பிள்ளைகளை அழைத்து செல்ல விரும்பும் பெற்றோர்கள் மதியம் 12.55 மணிக்கே கல்லூரிக்கு வந்து அழைத்து செல்லலாம் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் கல்லூரி நேரம் 8 மணிமுதல் 1 மணிவரை என்று மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளது.