ஈழுவா மற்றும் தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதிச்சான்று வழங்குவது தொடர்பாக நான்கு உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்ட செய்திக்குறிப்பு : ஈழுவா மற்றும் தியா சமுதாய மக்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சாதிச்சான்றிதழ் வழங்கக் கோரும் முறையீடுகளை ஆராய்ந்து அரசுக்கு அறிக்கை சமர்பிக்கக் கோரி அரசாணை (நிலை) எண்.39 பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, நாள்:21.04.2020-ல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களை தலைவராக நியமித்து நான்கு உறுப்பினர்களை கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி பொருள் தொடர்பாக குழுவிற்கு கோரிக்கைகள்/முறைகேடுகள் மற்றும் ஆவணங்களை சமர்பிக்க விரும்புவோர் 26.05.2020-க்குள் அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் அல்லது குழுவின் உறுப்பினரான செயலர், மிகப்பிற்படுத்தபட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர், எழிலகம் விரிவாக்க கட்டடம், 2ம் தளம், சேப்பாக்கம், சென்னை-5, அவர்களுக்கு எழுத்து பூர்வமாக தபால்/மின்னஞ்சல் மூலமாக அளிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தூத்துக்குடி தொலைபேசி எண். 0461-2340600-த்திலும் தொடர்பு கொள்ளலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தொவித்துள்ளார்.
Credit : Tutyonline