கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை : முதலமைச்சர்

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி K. பழனிச்சாமி அவர்கள் நேற்று (05.05.20) பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைந்துள்ள அம்மா மாளிகையில் சென்னை மாநகரில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது : அச்சுறுத்தி உறையவைத்த கொடிய நோய் கரோனா வைரஸ் நோய். வல்லரசு நாடுகளில் இருந்து வளர்ந்து வரும் நாடுகள் முதல் பல்லாயிரக்கணக்கான பேர் இந்த நோயினால் இருந்துள்ளார்கள். அப்படி வல்லரசு நாடுகளே, வளர்ந்த நாடுகளே கட்டுப்படுத்த முடியாமல், பரவி கொண்டிருக்கின்ற இந்த சூழ்நிலையிலே தமிழகத்திலேயே இந்த கரோனா வைரஸ் நோயை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு பல்வேறு பொருட்களை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இன்றைக்கு தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் மத்திய அரசு அறிவித்த வழிகாட்டுதலின்படி நோய் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். இந்த நோய் பரவலை தடுப்பதற்கு என் தனிமையில் 14 முறை ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று இருக்கிறது.

இன்றைக்கு மற்ற மாநிலத்தை காட்டிலும் தமிழகத்திலே இந்த நோய் பரவலை தடுப்பதற்கு கடுமையான முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும் சென்னையில் வேகமாக பரவி அதற்கு காரணம் அதிகமான மக்கள் நிறைந்த நகரம், தமிழகத்திற்கு தலை நகரமாக விளங்குவது சென்னை மாநகரம். குறுகலான தெரு அதிகமான மக்கள் வசிக்கின்ற பகுதி, அதனால் எளிதாக நோய் ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பழகி விடுகிறது. சென்னை மாநகரத்தை பொறுத்தவரைக்கும் இதுவரைக்கும் 1724 பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 267. இறந்தவர்களின் எண்ணிக்கை 19 பேர். அதில் திரு.வி.க நகரிலே 356 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். கோடம்பாக்கத்தையே 257 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அண்ணாநகரில் 141, வளசரவாக்கத்தில் 114, ராயபுரத்தில் 299 பேர், தேனாம்பேட்டையில் 206 பேர், பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் உரிய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகரத்தில் மட்டும் நான்காயிரம் படுக்கை வசதிகள் கூடிய மருத்துவமனை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த நோயினை கட்டுப்படுத்துவதற்காக நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் உருவாக்க வேண்டும் என்பதற்காக zinc, மற்றும் வைட்டமின் மாத்திரைகள் அனைவருக்கும் கொடுக்கப்படுகிறது. அதோடு கபசுர குடிநீர் வழங்கப்படுகிறது. நிலவேம்பு கசாயம் வழங்கப்படுகிறது.

இன்றைக்கு அரசு கண் இமை காப்பது போல மக்களை காத்து வருகிறது. இந்த சோதனையான நேரத்திலே மக்கள் அரசு அறிவிக்கின்ற அறிவிப்பை முறையாக கடைபிடித்தாலே நோய் பரவலை தடுக்க முடியும். எனவே மக்கள் அரசு அறிவிக்கின்ற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கண்டிப்பாக வெளியே செல்லும்போது முக கவசம் அணிய வேண்டும். அதே போல் அடிக்கடி சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும். பொருட்களை வாங்குகின்ற போது, காய்கறி மார்க்கெட்டு மற்றும் மளிகை கடைகளுக்கு சென்றாலோ, வங்கிகளுக்கு சென்றாலோ சமூக இடைவெளியை பின்பற்றி வரிசையில் நின்று பொருட்களை வாங்கி சென்றார் நிச்சயமாக வைரஸ் தொற்று நோய் பரவலை தடுக்க முடியும். அதற்கு மக்கள் அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று பொதுமக்களை வேண்டி கொள்கிறேன் என்று கூறினார்.