தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை

உலகம் முழுவதும் பரவி வரும் கொரானா வைரஸ் தொற்று நோயை கட்டுப்படுத்தும் வகையில் தமிழ்நாடு முழுவதும் 24.3.20 அன்று மாலை 6 மணி முதல் 31.3.20 வரை ஊரடங்கு உத்தரவு முதலில் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் மத்திய அரசு அதை 15.4.20 அன்று காலை வரை நீடித்தது. ஊரடங்கு உத்தரவை தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருவதன் காரணமாக தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பெருமளவில் பரவாது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது உள்ள ஊரடங்கு உத்தரவை மீட்பது தொடர்பாகவும், கொரானா வைரஸ் தொற்று அழகாக மாநிலங்கள் எடுத்துவரும் நடவடிக்கைகளையும் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களால் காணொலிக் காட்சி மூலமாக 11.4.20 அன்று கலந்தாய்வு மேற்கொண்டார். கலந்தாய்வின் போது தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளும், தமிழ்நாட்டிற்கு போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும், மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களிடம் நான் எடுத்துரைத்தேன். மேலும் 30.4.20 வரை ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க வேண்டும் என்ற என்னுடைய கருத்தினை தெரிவித்தேன். நானும் மற்ற முதலமைச்சர்களும் காரோனா நோய் தடுப்பு நடவடிக்கை ஆனவுடனே உத்தரவினை நீட்டிக்க வேண்டும் என வலியுறுத்தினோம்.

மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தின் நடவடிக்கைகளின் அடிப்படையிலும், உலக சுகாதார அமைப்பின் கருத்தின்படி மருத்துவ நிபுணர் மற்றும் பொது சுகாதார வல்லுனர் குழுவின் பரிந்துரைகளின் படி மாநிலத்தின் உறங்கினாலும் நோய் தொற்று அதிகரிக்கக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு, 11.04.20 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படியும் மாண்புமிகு பாரதப் பிரதமர் அவர்களின் கலந்தாய்வுக் கூட்டத்தின் நடவடிக்கைகளின் அடிப்படையிலும், உலக சுகாதார அமைப்பின் கருத்தின்படி மருத்துவ நிபுணர் மற்றும் பொது சுகாதார வல்லுனர் குழுவின் பரிந்துரைகளின் படி மாநிலத்தின் உறங்கினாலும் நோய் தொற்று அதிகரிக்கக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு, 11.04.20 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படியும் பேரிடர் மேலாண்மை சட்டம் அதன்படியும் குற்றவியல் விசாரணை முறை சட்டம் பிரிவு 144 படியும் 30.4.20 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுகிறது. கொரானா நோய் தொற்றினை தடுக்கும் நோக்கில் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இன் படியும் குற்றவியல் விசாரணை முறை சட்டப் பிரிவுகளின்படி தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அனைத்துக் கட்டுப்பாடுகளும் தொடரும்.

ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் காரணத்தினால் தமிழ்நாட்டில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மே மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் அதாவது ஒரு கிலோ சர்க்கரை ஒரு கிலோ துவரம் பருப்பு ஒரு ‘ எண்ணெய் சமையல் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு எப்போது வழங்கப்படும் அரிசி ஆகியவை நியாயவிலை கடைகளில் விலையின்று வழங்கப்படும். கட்டட தொழிலாளர்கள் உட்பட பதிவு பெற்ற அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் குடும்பத்திற்கும், குடும்பம் ஒன்றிற்கு இரண்டாவது முறையாக 1000 ரூபாய் நிவாரண உதவி அளிக்கப்படும். பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கும் மே மாதத்திற்கு 15 கிலோ அரிசி ஒரு கிலோ துவரம் பருப்பு சமையல் எண்ணெய் விலை என்று வழங்கப்படும்.
மேலும் சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள மக்கள் கொரானா நோய் தொடர்பான தங்கள் சந்தேகங்களை தீர்த்துக்கொள்ள டெலி மெடிசன் சொசைட்டி ஆப் இந்தியா அலுவலகத்தில் பதிவு பெற்ற சிறந்த மனிதர்களை கொண்டு தொலை மருத்துவ முறை மூலம் தங்கள் மருத்துவ சந்தேகங்களுக்கு தெளிவு பெற தமிழக அரசு வழிவகை செய்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் ஒவ்வொரு குடும்பமும் பாதுகாக்க இருப்பதுதான் மாண்புமிகு அம்மாவின் அரசுக்கு மிகவும் முக்கியமானது. ஆகவே தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்படுகின்றன அனைத்து வழிமுறைகளையும் தவறாமல் பின்பற்றி விழித்திருங்கள் விலகி இருங்கள் வீட்டில் இருங்கள்என்ற கோட்பாட்டின் அடிப்படையில் சமூக இடைவெளியை கடைபிடித்து வரும் வைரஸ் நோயை கட்டுப்படுத்த அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் ஒவ்வொருவரையும் வேண்டிக்கொள்கிறேன்.