தமிழகத்தில் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாத கால அவகாசம் : முதல்வர்

கரோனா அச்சுறுத்தலினால் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக மக்கள் தங்கள் வேலையை இழந்து வருமானமின்றி தவிக்கின்றனர். இதையடுத்து, மத்திய, மாநில அரசுகள் மக்கள் நலன் கருதி சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. அதன்படி, தமிழகத்தில் மக்கள் சொத்துவரி, குடிநீர் கட்டணம் செலுத்த 3 மாத கால அவகாசம் அளிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, சென்னை மாநகராட்சி உள்பட தமிழகத்தின் அனைத்து உள்ளாட்சி பகுதிகளிலும் ஜூன் 30 வரை வரி செலுத்தத் தேவையில்லை எனவும் இந்த மூன்று மாத கால அவகாசத்திற்கும் எந்தவித அபராதமும் விதிக்கப்படாது எனவும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.