வெளிமாநில தொழிலாளர்களை விரைவில் சொந்த இடத்திற்கு அனுப்பி வைக்கப்படும் : முதல்வர்

தமிழகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிக பேர் இருக்கின்றார்கள். வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு பல்வேறு பகுதிளிலே சில கட்டுப்பாடுகளுடன் இப்பொழுது பணி தொடங்கப்பட்டுவிட்டன. அப்படி பணிபுரிய விருப்பம் உள்ள தொழிலாளர்கள் இங்கேயே தங்கிவிடலாம். தங்களுடைய மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் அவர்கள் விவரங்களை சேகரித்து வெளிமாநிலங்களுக்கு செல்வதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்யும் பணி நடந்து கொண்டிருக்கின்றன. எங்கயாவது ஒரு இடத்தில் மட்டும் கணக்கெடுப்பு நடந்தால் வெளி மாநில மக்கள் தங்களது மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் ஒரே இடத்திலேயே வந்து விட்டால் பிரச்சினை ஏற்பட்டுவிடும். ஆகவே ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக சுமார் 7, 8, 10 குழுக்களாக அமைத்து பணிகள் நடைபெற்று வருகிறது.

வெளிமாநிலத்தில் இருந்து இங்கே தங்கி பணி புரியும் தொழிலாளர்களை இரவு 10 மணிக்கு மேல் தான் ரெயிலுக்கு அழைத்து செல்லவேண்டும். ஏனென்றால் பகல் நேரத்தில் அழைத்து சென்றால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். தமிழ்நாட்டில் சுமார் 50,000 பேர் வெளிமாநில தொழிலாளர்கள் இங்கேயே தங்கி பணிபுரிந்து வருகிறார்கள். அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் அழைத்து செல்ல வசதி ஏற்படுத்திக் கொடுக்க இயலாது. என்றால் ரயில் மூலமாக தான் அவரை செல்ல வேண்டும். ஆகவே அந்தந்த மாநிலத்திற்கு எந்தெந்த ரயில்கள் இயக்கப்படும் என்ற விவரங்களை எல்லாம் அவர்களிடத்திலேயே கூறி எந்தெந்த தேதிகளில் அவர்களை அழைத்து செல்ல இருக்கின்றோம் என்ற விவரங்களை எல்லாம் தெளிவாக சொல்லிவிட வேண்டும். இதை எச்சரிக்கையாக கையாள வேண்டும். பிற மாநில தொழிலாளர்கள் எங்கெல்லாம் தங்கியிருக்கிறார்கள் என்ற விவரம் நம் கையில் இருக்கிறது. அந்த இடங்களுக்கு சென்ற நேரடியாக சந்தித்து, இந்த தேதியில் இத்தனை மணிக்கு ரயில் இருக்கிறது. நாங்கள் நேரடியாக அழைத்து சென்று உங்களை ரயிலில் ஏற்றி விடுவோம் என்ற தகவலை கூறிவிட வேண்டும். அதுவரை யாரும் வெளியில் வரக்கூடாது என்ற தகவலையும் தெரிவிக்க வேண்டும். ஒரே நேரத்தில் அனைவரும் அழைத்து செல்ல முடியாது. அந்த அளவிற்கு ரயில் வசதியை செய்து கொடுக்க முடியாதுபடிப்படியாக ஒரு வாரத்துக்குள் அவருடைய சொந்த மாநிலத்திற்கு செல்வதற்கு அரசு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் என தெரிவித்தார்