தூய்மை பணியாளர்கள் பணி நிரந்தரம் மற்றும் தனியார் வங்கி மாதத்தவணை மிரட்டல் குறித்து மனு

தமிழகம் முழுவதும் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் உயிரை கூட துச்சமென நினைத்து கொரானா மீட்புப் பணியில் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சிகளில் பணி செய்து வருகிறார்கள். ஆனால் இங்கே இருக்கும் அதிகாரிகள் தூய்மைப் பணியாளர்களை பணிக்கு அழைத்து வருவதற்கு குப்பை வண்டியில் அவர்களை சமூக இடைவெளி இல்லாமல் அந்த வண்டியிலே எடுத்துவரும் சூழல் தமிழகத்தில் பல மாவட்டங்களில் நடந்தெறி உள்ளது. பணியின்போது தூய்மைப் பணியாளர்கள் இறந்துவிட்டால் அவர்களது உடலை எடுத்துச் செல்வதற்காக ஆம்புலன்ஸ் பயன்படுத்தாமல் குப்பை வண்டியில் எடுத்து செல்லும் நவீன தீண்டாமையை நாங்கள் பார்க்கின்றோம். இது போல செயல்கள் ஒழித்திட வேண்டும். மேலும் தமிழக முதல்வர் அறிவித்ததுபோல் பேரிடர் காலங்களில் தற்போது கொரானா பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை தொழிலாளர்களுக்கு வருமானம் இரட்டிப்பாக வழங்கப்படும் என்ற அறிவிப்பை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகம் முழுவதும் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களை பணிப் பாதுகாப்புடன் பணியை நிரந்தரப்படுத்த வேண்டும். அன்றாடம் கொரானா பணியில் ஈடுபட்டுவரும் தூய்மை பணியாளர்களுக்கு முறையாக மருத்துவ சோதனை செய்து அவர்களை பாதுகாத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கனரக வாகனங்களில் குப்பை அள்ளுவதற்கு பெண் தூய்மையாளர்கள் பயன்படுத்தப்படுவதை அனுமதிக்கக்கூடாது.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள தனியார் வங்கிகள் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் கடன் பெற்றால் மக்களுக்கு அரசு மூன்றுமாத காலங்களுக்கு தவணை தொகை செலுத்த வேண்டாம் என அறிவிப்பை அறிவித்தும் தொடர்ந்து தவணைத் தொகையை செலுத்துமாறு மிரட்டி வரும் தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இன்றைய தினம் திராவிட தமிழர் கட்சி சார்பாக தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அளிக்கின்றோம்.

இம் மனுவின் மீது உரிய நடவடிக்கை எடுத்து தூய்மைப் பணியாளர்களின் நலன்களை பாதுகாத்திடவும் பொதுமக்களை தனியார் நிறுவனங்களில் மிரட்டலில் இருந்து பாதுகாத்திடவும் மாவட்ட நிர்வாகம் உதவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.