தூத்துக்குடியில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் பற்றிய கருத்தரங்கம் : சிஐஐ (CII) ஒய் ஐ (young Indians)

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சிஐஐ (CII) ஒய் ஐ (young Indians) அமைப்பின் சார்பில் பெண்களுக்கு அதிகாரமளித்தல் பற்றிய கருத்தரங்கம் இன்று (02.03.2020) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒய் ஐ அமைப்பின் தலைவர் மதன் தலைமை தாங்கி வரவேற்புரை ஆற்றினார். சென்னையில் உள்ள அவதார் குரூப் நிறுவன தலைவர் டாக்டர்.சௌந்தர்யா ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். தொழில்துறையில் சிறந்து விளங்கும் மிஸ்சி மசாலா தயாரிப்பாளர் பெல்வின் கிரிஸ்டோபர், சமூக சேவையில் சிறந்து விளங்கி வரும் ஜீண்ஜீகன் முதியோர் இல்லக் காப்பாளர் கேத்ரூட், கல்விப்பணியில் சிறந்து விளங்கி வரும் எக்ஸ் அண் பள்ளி முதல்வர் இவான்ஜிலின், தேசிய அளவில் நீச்சல் போட்டிகளில் சிறந்து விளங்கும் செல்வி.மம்தா ஆகியோரது சாதனைகளை பாராட்டி கவுரவபடுத்தினார்.

பெண்கள் அதிகாரம் பற்றி அவர் பேசினார் மாணவிகளை வாழ்க்கையில் மேலும் சாதிக்க ஊக்கப்படுத்தினார். பெண்கள் தயக்கமின்றி தங்கள் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார். பெண்களில் முன்னேற்ற அவர்கள் மேற்கொள்ள வேண்டிய சில வழிமுறைகளையும் எடுத்துக் கூறினார்.