இந்தோனேஷியா பாதம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட, ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட ஹன்னா என்ற எண்ணெய் டேங்கர் கப்பல் நேற்று தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்துக்கு வந்தது. அந்த கப்பலில் சீனாவை சேர்ந்த 21 மாலுமிகள் உள்ளனர். சீனாவில் கரோனா வைரஸ் தாக்கல் இருக்கின்ற. நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு காற்றாலை உபகரணங்களை ஏற்றி கொண்டு சீனாவில் இருந்து வந்த கப்பல் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் நுழைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. எனவே தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக சுகாதார அதிகாரி தலைமையிலான மருத்துவ குழுவினர் சம்பந்தப்பட்ட கப்பலில் உள்ள மாலுமிகளுக்கு கரோனா பாதிப்புகள் உள்ளதா? என்று பரிசோதனை நடத்தினர். பரிசோதனைக்கு பிறகு கப்பல் துறைமுகத்தில் அனுமதிக்கப்பட்டு சரக்கை இறக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
