வெளிமாநில தொழிலாளர்களுக்கு முதல்வர் அறிக்கை

வெளிமாவட்டங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து பணிபுரியும் வெளி மாநிலத் தொழிலாளர்களை அவர்கள் விருப்பத்தின் பெயரில் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியுடன் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க அனைத்து விதமான ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளும் தமிழக அரசு எடுத்து வருகிறது. இதுவரை (6.5.20 முதல் 15.5.20 வரை) 55,473 வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களின் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் 43 ரயில்களில் பீகார் ஒடிசா ஜார்க்கண்ட் ஆந்திரா மேற்கு வங்காளம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் தினம் தோறும் சுமார் 10,000 வெளிமாநில தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் அனுப்பிவைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து வெளிமாநில தொழிலாளர்களும் அவர்கள் தன் விருப்பத்தின் பேரில் படிப்படியாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் அனுமதியோடு அவர்கள் தன் மாநிலத்துக்கு செல்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ரயில்வே கட்டணம் உட்பட அனைத்து செலவுகளையும் தமிழக அரசை ஏற்றுக்கொள்வதால் வெளிமாநில தொழிலாளர்கள் தன்னிச்சையாக நடைபயணமாகவோ இத வாகனங்கள் மூலமாகவும் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்கின்றேன். இதுவரை வெளிமாநில தொழிலாளர்கள் தற்போது தங்கியிருக்கும் முகாமிலேயே தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.