முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் – தூத்துக்குடி

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்  தூத்துக்குடி சார்பில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தலைமையில் இன்று (15.02.2020) தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ கலந்து கொண்டு, விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். இவ்விழாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.பி.சண்முகநாதன் (திருவைகுண்டம்), போ.சின்னப்பன் (விளாத்திக்குளம்) ஆகியோர் முன்னிலை வக்கித்தனர்.
மற்றும் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் மோகன், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வக்குமார், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் டி.வி.பேட்ரிக், மாவட்ட கால்பந்து பயிற்றுனர் ரா.நடராஜமுருகன், முக்கிய பிரமுகர்கள் ஆறுமுகநயினார், டி.ராஜசேகரன், பொன்ராஜ், ராமகிருஷ்ணன், ராஜா, குணசேகரன், அழகேசன், ஷெரீனா பாக்கியராஜ் மற்றும் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.