“சப்பாக்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

2015ம் ஆண்டு, காதலை ஏற்க மறுத்த காரணத்தால் தனது 15 வயதில் ஆசிட் வீச்சுக்கு ஆளானவர் லட்சுமி அகர்வால். அந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்த லட்சுமி அர்வால் அழகான முகத்தை பறிகொடுத்துவிட்டு சமூகத்தின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளான அவர், சான்வ் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பை ஏற்படுத்தி ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பாடுபட்டு வருகிறார். இந்த நிலையில், லட்சுமி அகர்வால் வாழ்க்கையை மையமாக வைத்து மேக்னா குல்சார் என்ற இயக்குநர் “சப்பாக்” என்ற பெயரில் படம் ஒன்று தயாராகி வருகிறது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் வேடத்தில் தீபிகா படுகோனே நடித்துள்ளார். இப்படத்தின் டிரெய்லர் இணையத்தில் வெளியாகியுள்ளது.