குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தாக்கப்பட்டதிற்கு எதிராகவும் சென்னையில் பல இடங்களில் கல்லூரி மாணவர்களும், இந்திய மாணவர் சங்கத்தினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர். சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்குடியுரிமை திருத்தம் சட்ட மசோதாவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்பு அங்கு வந்த காவல்துறையினர் மாணவர்களின் போராட்டத்தை கலைத்தனர். இதனால் சென்னைபல்கலைக்கழகத்திற்கு இன்று முதல் 23 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
