சென்னை மாநகர போக்குவரத்துக் கழக ஊழியர்கள் விடுப்பு எடுக்கக் கூடாது

குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக சென்னையில் இன்று தி.மு.க. மற்றும் தோழமைக் கட்சிகளின் பேரணி நடைபெறுகிறது. இதில் பங்கேற்க பல்வேறு அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் தொழிலாளர்கள் அனைவரும் வழக்கம்போல பணிக்கு தவறாமல் வர அறிவுறுத்தப்பட்டுள்ளது. இன்று வழங்கப்பட்ட விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், வார விடுமுறையில் இருப்பவர்கள் உள்ளிட்டோரும் கட்டாயம் பணிக்கு வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.