தூத்துக்குடி புனித சூசையப்பர் ஆதரவற்ற ஏழை குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா – முதல்வர் பங்கேற்பு

மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாளையொட்டி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி .கே. பழனிசாமி அவர்கள் இன்று (22.02.20) தூத்துக்குடி மாவட்டம், அடைக்கலாபுரத்தில் புனித சூசையப்பர் ஆதரவற்ற ஏழை குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

உடன் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு கடம்பூர் ராஜு, மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், டெல்லி சிறப்பு பிரதிநிதி.திரு.என் தளவாய்சுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.எஸ்.பி சண்முகநாதன் மற்றும் திரு.டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் திரு.ஏசி.சண்முகம், தலைமை செயலாளர் திரு சண்முகம் இ.ஆ.ப, மற்றும் புனித சூசையப்பர் ஆலய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *