மத்திய அரசின் இளம் பட்டதாரிகள் பயிற்சி திட்டம்: தூத்துக்குடி மாநகராட்சி

தூத்துக்குடி மாநகராட்சியில் சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது. மேற்படி பணிகள் தொழில்நுட்ப அறிவியல் சார்ந்த இளம் பட்டதாரிகள் மாநகராட்சியில் இணைந்து பயிற்சி பெறுவதற்கான (Internship-Training) அரிய வாய்ப்பினை மத்திய அரசின் இளம் பட்டதாரிகள் பயிற்சி திட்டத்தின் (TULIP) மூலம் ஏற்படுத்தியுள்ளது. எனவே படித்து முடித்து 18 மாதங்களுக்குள் இருக்கும் நிலையில் இளம் பட்டதாரிகள் மாநகராட்சியில் நடைபெறும் பணிகளில் இணைந்து தாங்கள் பயின்ற தொழில்நுட்ப கல்வியினை மேற்படி பணிகளில் செயல்முறைப்படுத்தி பயிற்சி பெறவும் மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் பணிகள் குறித்த நேரடி அனுபவ ரீதியான பயிற்சி பெறவும் விருப்பமுள்ள இளம் பட்டதாரிகள் தங்களது சுய விவரங்களுடன் கூடிய கல்வி சான்றுகளுடன் www.internship.aicte.india.org என்ற இணையதள முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் தொழில்நுட்ப, அறிவியல் சார்ந்த இளம் பட்டதாரிகள் பயிற்சி காலம் ஒரு வருடம் மேற்படி பயிற்சி காலத்தில் பயிற்சி பெறும் இளம்பட்டதாரிகளுக்கு மதிப்பூதியம் வழங்கப்படும் மேலும் பயிற்சி முடித்தவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்கப்படும். கூடுதல் விபரங்களுக்கு தூத்துக்குடி மாநகராட்சி பொறியியல் பிரிவு மற்றும் மாநகராட்சியின் Commr.thoothukudi @ tn.gov.in என்ற இணையதள முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் (ம) தனி அலுவலர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் அவர்கள் தெரிவித்துள்ளார்.