சியட் நிறுவனத்தின் டயர் உற்பத்தி தொழிற்சாலை திறப்பு – சென்னை

டயர் மற்றும் டயர் சார்ந்த பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை சியட் நிறுவனம் கடந்த 2018 ஆம் ஆண்டு தமிழக அரசு உடன் ஒப்பந்தம் செய்து கையெழுத்திடப்பட்டிருந்தது. இந்நிறுவனத்தின் டயர் உற்பத்தி தொழிற்சாலை காஞ்சிபுரம் – ஸ்ரீபெரும்பதுார் மதுரமங்கலம் அருகே கண்ணன்தாங்கலில் 4000 கோடி மதிப்பீட்டில் அதிநவீன ரேடியல் டயர்ஆலை உருவாக்கப்பட்டது. அந்த தொழிற்சாலையை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று திறந்து வைத்தார். இந்த புதிய தொழிற்சாலை மூலம் 1000 பேருக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைக்கும் என தகவல் தெரிவிக்கின்றன.