தூத்துக்குடி ஹவுசிங் போர்டு விநாயகர் கோவிலில் சிசிடிவி கேமரா திறப்பு விழா

தூத்துக்குடி ஹவுசிங் போர்டு விநாயகர் கோவிலில் சிசிடிவி கேமராவை சிப்காட் இன்ஸ்பெக்டர் துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி எட்டையாபுரம் ரோடு ஹவுசிங் போர்டு காலணியில் உள்ள நலம் தரும் விநாயகர் கோவிலில் 6 புதிய சிசிடிவி கேமரா திறப்பு மற்றும் மகாசிவராத்திரி பரிசளிப்பு விழாவிற்கு கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் நவநீதிகிருஷ்ணன் தலைமை வகித்தார். செயலாளர் தங்கமணி வரவேற்புரையாற்றினார். புதிய சிசிடிவி கேமரா மற்றும் மகாசிவராத்திரி அன்று ஓம்நமசிவாய எழுதிய அனைவருக்கும் எவர்சில்வர் பொருட்களை சிப்காட் இன்ஸ்பெக்டர் முத்துசுப்பிரமணியன், சப்இன்ஸ்பெக்டர் முத்துகணேஷ், தொழிலதிபர்கள் பாலசுப்பிரமணியன், ராமசாமி, சீதாபதி, போஸ், சட்ட ஆலோசகரும் முன்னாள் மாநகராட்சி கவுன்சிலருமான வக்கீல் பாலகுருசாமி ஆகியோர் பரிசு வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் கோவில் துணைத்தலைவர்கள் ராதா, பத்மநாபன், உதவி செயலாளர்கள் சிங்கராஜ், ரெங்கராஜ், பொருளாளர் சரவணக்குமார், மற்றும் காந்தி, தேவி, சங்கர்ராம், சேகர், ஆரோன் மோசஸ், சந்திரசேகரன், ரவீசந்திரன், ராஜாராம், மாரிமுத்து, வேல்முருகன், ஜெயக்குமார், உள்பட பக்தர்கள் பொதுமக்கள்கள் கலந்து கொண்டனர். சட்ட ஆலோசகர் வக்கீல் சீனிவாசன் நன்றியுரையாற்றினார்.