பெற்றோரை கவனிக்காத 15 ஆயிரத்து 650 பிள்ளைகள் மீது வழக்குகள் பதிவு – கேரளா அரசு

வயதான மற்றும் நோய் பாதித்த பெற்றோரை பிள்ளைகள் பராமரிக்காமல் அவர்களை தவிக்க விடும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் இது போன்றோர் மீது 15 ஆயிரத்து 650 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. 2019-2020-ம் ஆண்டு இதுவரை 3 ஆயிரத்து 227 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கேரளாவிலும்  வயதான பெற்றோரை கவனிக்காத பிள்ளைகள் மீது வழக்கு பதிவு செய்ய சட்டத்தில் இடம் உண்டு. பெற்றோரை தவிக்கவிடும் பிள்ளைகளுக்கு 3 மாதம் வரை ஜெயில் தண்டனை, ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என கேரள சட்டசபையில் சமூக நலத்துறை மந்திரி சைலஜா கூறினார்.