கரோனா வைரஸ் குறித்து வதந்தி பரப்புபவர் மீது வழக்கு : அரசு எச்சரிக்கை

தூத்துக்குடி மாவட்டம், இளையரசனேந்தல் அருகேயுள்ள கிராமத்தில் 4 பேருக்கு கரோனா தொற்று பரவியதாக வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பப்பட்டதாம். இதுகுறித்து, கிராம நிா்வாக அலுவலா் போத்திராஜ் அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புத்தூா் போலீசார், வாட்ஸ்அப்பில் வதந்தி பரப்பியதாக கல்லூரி மாணவா் மீது வழக்குப் பதிந்து அவரை தேடி வருகின்றனா். மேலும், சமூக வலைதளங்களில் கரோனா வைரஸ் தொற்று குறித்து வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினா்.