சீனாவைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அங்கு கூட்டம் அதிகமாக இருந்ததால், அமர ஏதும் நாற்காலி கிடைக்கவில்லை. எனவே அவரது கர்ப்பிணி மனைவி நீண்ட நேரம் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. அவரது மனைவி மிகவும் சோர்வாக இருந்துள்ளதை கவனித்த அவர் உடனே தரையில் மண்டியிட்டுத் தன்னை ஒரு நாற்காலி போல் ஆக்கி தன் முதுகில் மனைவியை அமர வைத்துக் கொண்டார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, பலரது பாராட்டையும் அவர் பெற்றார்.
