சிறையில் சிக்கிய கஞ்சா பொட்டலங்கள் – பெங்களூரு

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் கைதிகளிடையே சோதனை நடத்தப்பட்டது, இந்த சோதனையில் கஞ்சா பொட்டலங்கள், நூற்றுக்கணக்கான சிம்கார்டுகள் மற்றும் 37 கத்தி போன்ற ஆயுதங்கள் சிக்கியுள்ளன.  கர்நாடக மாநிலம் பெங்களூருவை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரத்தில் மத்திய சிறை அமைந்துள்ளது.  இந்த சிறையில் ஆயுள் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் உள்பட 2 ஆயிரத்து 200-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறையில் உள்ள கைதிகளுக்கு கஞ்சா மற்றும் மதுபாட்டில்கள் கிடைப்பதாக பெங்களூரு மாநகர காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து காவல் துறையினர் இன்று அதிகாலை பரப்பன அக்ரஹார சிறையில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் கஞ்சா பொட்டலங்கள், நூற்றுக்கணக்கான சிம்கார்டுகள், மதுபாட்டில்கள், 37 கத்தி போன்ற ஆயுதங்கள் சிக்கின. இது தொடர்பாக அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.