புற்றுநோய் விழிப்புணர்வுகாக மோட்டார் சைக்கிளில் பயணம்!

விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர்கள் வைசாலி (52), சுப்ரியா (41). சுப்ரியா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர். இவர்கள் 2 பேரும் புற்றுநோய் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக விசாகப்பட்டினத்தில் இருந்து புனே வரை மோட்டார் சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள முடிவு செய்து கடந்த மாதம் 26-ந்தேதி தங்களது பயணத்தை தொடங்கினார்கள்.அவர்கள் நேற்று காலையில் தூத்துக்குடிக்கு வந்தனர். அவர்கரளுக்கு தூத்துக்குடி குரூஸ்பர்னாந்து சிலை அருகே சமூக ஆர்வலர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. அதன்பின்னர் அவர்கள் தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.