நீலகிரியில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு நடத்துவதற்காக தானியங்கி கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.புலிகள் காப்பக உள்மண்டல வனப்பகுதி 321 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்டுள்ளது.மொத்தம் 121இடங்கள் தேர்வு செய்யப்பட்டு அதில் 382 தானியங்கி கேமராக்களை பொறுத்துகின்றன.25 நாட்களுக்கு இந்த கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகின்றன.இன்னும் 2 நாட்களில் கேமரா பொறுத்தி முடிக்கப்பட்டு அதன் பிறகு புலிகள் கணக்கெடுப்பு பணிகள் தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
