குழந்தைகள் பெண்கள் உட்பட குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் திட்டம் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு முகாம் – தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக குழந்தைகள் பெண்கள் உட்பட குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கும் திட்டம் குறித்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து காவல்துறை ஆய்வாளர் கொள்ளும் விழிப்புணர்வு முகாம் தூத்துக்குடி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் இயங்கிவரும் சமரச மையத்தில் வைத்து 12.02.2020 அன்று நடைபெற்றது. மேற்படி விழிப்புணர்வு முகாம் ஆனது தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதிமன்ற நடுவர் திருமதி S. ஹேமா அவர்களின் தலைமையிலும், தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் சார்பு நீதிபதி திரு.R. சாமுவேல் பெஞ்சமின் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.முருகன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. மேற்படி விழிப்புணர்வு முகாமில் சுமார் 50 க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேற்படி முகாமில் பாதிக்கப்பட்டோர் நஷ்டயீடு திட்டம் 2013, பாதிக்கப்பட்ட பெண்கள் நஷ்டயீடு திட்டம் 2018, போக்சோ சட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான நஷ்ட ஈடு திட்டம் மற்றும் அமில வீச்சால் பாதிக்கப்பட்டு திட்டம் ஆகியவை குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு சார்பு நீதிபதி திரு ஆர் சாமுவேல் பெஞ்சமின் அவர்கள் பயிற்சி வகுப்பு எடுத்தார். மேலும் மேற்படி முகாம் மூலம் குழந்தைகள் பெண்கள் உள்பட குற்றங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் மூலமாகவும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மூலமாகவும், நஷ்டஈடு தொகையை பெறுவதற்கு காவல்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுப்பது குறித்தும் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நீதிமன்றம் மூலம் நஷ்ட ஈடு பெறுவதற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு சார்பாக 10 பெண் வழக்கறிஞர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளது குறித்தும் மேற்படி வழக்கறிஞர்கள் மூலமாக குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சார்பில் போக்ஷோ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து நஷ்டஈடு விரைந்து பெறுவதற்கும் பாதிக்கப்பட்ட பெண்கள் நஷ்ட திட்டத்தின் கீழ் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் மனு தாக்கல் செய்வது சம்பந்தமாக மாதிரி விண்ணப்ப படிவங்கள் விழிப்புணர்வு முகாமில் கலந்துகொண்ட அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டது. மேற்படி விழிப்புணர்வு முகாமிற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு வினர் செய்தனர்.