வரும் 2020-21ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி மாதம் இறுதியிலோ அல்லது மார்ச் முதல் வாரத்திலோ சட்ட பேரவை கூட்டத்தில் தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்ககப்படுகிறது. இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தலைமை செயலகத்தில் இன்று மாலை நடைபெறுகிறது. இக்கூட்டத்தின் போது நிதி நிலை அறிக்கை தயாரிப்பு பணிகள் , நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், மற்றும் இனி நடக்க இருக்கும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படலாம் என தெரிகிறது.
-seithikkural