தற்கொலை செய்துகொண்ட தொழிலதிபர்- வீடியோ எடுத்த மக்கள் – குறைந்து போன மனிதம்

குஜராத்தின் சூரத்தைச் சேர்ந்த 51 வயதான தொழிலதிபர் பியூஷ் பச்சிகர் ஹோட்டலின் 5வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். செப்டம்பர் 25 ஆம் தேதி, வல்சாத் மாவட்டத்தின் வாபி நகரில் உள்ள ஹோட்டல் மகாராஜாவில் நடந்த அந்த சம்பவத்தில் ஹோட்டலின் ஐந்தாவது மாடியில் இருந்து தற்கொலை செய்ய கீழே குதித்துள்ளார் பியூஷ் பச்சிகர்.அவர் பட்டப்பகலில் இவ்வாறு செய்தபோது, அதை வீடியோக்களாக எடுப்பதில் அப்பகுதி மக்கள் மும்முரமாக இருந்ததால் அவரைத் தடுப்பது பற்றி யாரும் கவலைப்படவில்லை, முயற்சியும் செய்யவில்லை என்ற விஷயம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. ஒரு சிலர் மட்டுமே, குதிக்காதீர்கள்.. குதிக்காதீர்கள் என சத்தம் போட்டுள்ளனர். ஆனால் பெரும்பாலானோர் வீடியோ எடுப்பதில் மும்முரமாக இருந்துள்ளனர் .
அவர் குதித்த சில நிமிடங்களில், அந்த தற்கொலை வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட தொடங்கின. போலீசார் வந்து அவர் உடலை போஸ்ட்மார்டத்திற்கு அனுப்பும் முன்பாகவே, இந்த வீடியோ வைரலாகியுள்ளது.