நாடு முழுவதும் கோரானா பரவல் தாக்கம் குறைய வேண்டி தூத்துக்குடி பிரித்தியங்கிரா தேவி கோவிலில் ஆலய நிர்வாகி சீனிவாச சித்தர் 8 மணி நேரம் பூமிக்குள் உடலை புதைத்து சுற்றி நெருப்பு வளையம் வைத்து தவ பூஜை மேற்கொண்டார்.
நாடு முழுவதும் கரோனா பரவல் தாக்கம் அதிகளவு இருந்து வரும் வகையில் உலக நன்மை வேண்டியும் கோரணா பரவல் தாக்கம் குறைய வேண்டியும்,
நீர், நிலம், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்கள் சமநிலை அடைய வேண்டி தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி காலபைரவர் சித்தர் சித்தர் பீடத்தில் ஆலயத்தின் நிர்வாகி சீனிவாச சித்தர் இன்று காலை 6 மணி முதல் தனது உடலை பூமிக்குள் புதைத்து தவ பூஜையை தொடங்கினார் .
6 மணி முதல் மதியம் 2 மணி வரை 8 மணி நேரம் உடலை பூமிக்குள் புதைத்து சுற்றி நெருப்பு வளையம் அமைத்து அஷ்ட காளி களை வேண்டி அவர் தவ பூஜை நடத்தினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பஞ்ச பூதங்கள் சம நிலையில் இருந்தால் எந்தவித நோயும் பரவாது என்பதால் சித்தர்கள் உடலைப் பூமிக்குள் புதைத்து சுற்றி நெருப்பு வளையம் வைத்து வேண்டுதல் நடத்துவது வழக்கம். அதன் அடிப்படையில் பிரத்தியங்கிரா தேவி கோயிலில் தவ பூஜை நடத்தப் பட்டதாகவும் தெரிவித்தார்.
