கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து மக்களை காப்பற்ற, ஏற்கனவே ஏப்ரல் 14ம் தேதி முதல் 21 நாட்கள் முதற்கட்ட ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்பின்னர் மே 3ம் தேதி வரை இரண்டாம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், மேலும் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் அதிகமாக உள்ளதால் மே 4 ஆம் தேதி முதல், மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவப்பு மண்டலங்களாக சென்னை, மதுரை, நாமக்கல், தஞ்சாவூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருப்பூர், ராணிப்பேட்டை, விருதுநகர், திருவாரூர், வேலூர், காஞ்சிபுரம் ஆகிய 12 மாவட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. தேனி, தென்காசி, நாகப்பட்டினம், திண்டுக்கல், விழுப்புரம், கோவை, கடலூர், சேலம், கரூர், தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, ராமநாதபுரம், திருநெல்வேலி, நீலகிரி, சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, தருமபுரி ஆகிய மாவட்டங்கள் ஆரஞ்சு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 28 நாட்களில் எந்த ஒரு புதிய கொரோனா தோற்றும் இல்லாத, கிருஷ்ணகிரி மாவட்டம் மட்டுமே பச்சை மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் :
*மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து நீடிக்கும்.
* பச்சை மண்டல பகுதிகளில் 50% பயணிகளுடன் 50% பேருந்துகளை இயக்க அனுமதிக்கப்படும்.
*மக்கள் அதிகமாக கூடும் எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி கிடையாது.
* சிவப்பு மண்டல பகுதிகளில் எந்த தளர்வும் இல்லை
*சிவப்பு மண்டலங்களில் ரிக்ஷா, ஆட்டோ, கார், போன்ற வாகனங்கள் இயக்கத் தடை
* சிவப்பு மண்டலங்களில் பேருந்துகள், சலூன்கள், அழகு நிலையங்கள் மூடியே இருக்க வேண்டும்.
*ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் காரை இயக்கலாம்.
* மக்கள் அதிகமாகக் கூடும் எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி கிடையாது.
* நாடு முழுவதும் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் தொடர அனுமதி உள்ளது, அங்கும் கண்டிப்பாக சமூகவிலைகளை மக்கள் கடைபிடிக்க வேண்டும்.
*மேலும் இரண்டு வாரங்களுக்கு பள்ளிகள், கல்லூரிகள் இயங்க அனுமதி இல்லை.
* பேருந்து டெப்போக்களில் 50 சதவீத பேருந்துகளை மட்டுமே இயக்க வேண்டும்.
* பச்சை மற்றும் ஆரஞ்சு மண்டல பகுதிகளில் அத்தியாவசியமற்ற பொருட்களுக்கும் இ-வணிகத்தில் வாங்கிக்கொள்ள அனுமதி
*மேலும் 2 வாரங்களுக்குச் சாலை, ரயில், விமான போக்குவரத்து சேவைகள் இல்லை
* சிவப்பு மண்டல பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் தொடரும்
*இரவு 7 மணி முதல் காலை 7 மணிவரை மக்கள் வெளியே வரக்கூடாது.
* முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் வீட்டை விட்டுக் கண்டிப்பாக வெளிவரக்கூடாது
*சரக்கு போக்குவரத்து எந்த தடையும் இல்லை
* சிவப்பு மண்டலங்களில் தனியார் அலுவலகங்கள் 33%பணியாளர்களுடன் மட்டுமே செயல்பட வேண்டும்.
*சிவப்பு மண்டலத்தில் நகர பகுதிகளில் சில கட்டுப்பாடுகளுடன் ஆலைகள் இயக்க அனுமதி என தெரிவிக்கப்பட்டுள்ளது.