அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம்

அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பல முயற்சிகளை எடுத்து வருகிறது. மதிய சத்துணவுத் திட்டம் ஏற்கனவே அமலில் உள்ள நிலையில் அரசுப் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வசதியற்ற, வறுமையில் இருப்பவர்களிடம் இந்த திட்டமும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.