பள்ளிகளில் இனி ஒவ்வொரு பாடவேளை முடிந்த பிறகு மாணவர்கள் தண்ணீர் அருந்த 10 நிமிட இடைவேளை வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், மாணவர்களின் ஆரோக்கியத்தை கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.