வெறிசோடி காணப்படும் புத்தக கடை: நோட்டு, பாடபுத்தகங்களின் கையேடு விற்பனையாகததால் தூத்துக்குடியில் கடைக்காரா்கள் கவலை

ஊரடங்கால் பள்ளி, கல்லூாிகள் மூடப்பட்டு நோட்டு, பாடபுத்தகங்களின் கையேடு விற்பனையாகததால் தூத்துக்குடியில் கடைக்காரா்கள் கவலை!!!

தூத்துக்குடியில் நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக பள்ளி, கல்லூாி மாணவ & மாணவிகளுக்கான நோட்டு பாடப்புத்தகங்களின் கையேடுகள் விற்பனை செய்து வரும் கடைக்காரா்கள் தற்போது கொரோனா தொற்றால் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் பள்ளி, கல்லூாிகள் மூடப்பட்டு மாணவ & மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆன்லைன் கல்விக்கு மாறியதால் நோட்டு,பாடப்புத்தகங்கள், கையேடுகளின் விற்பனை வலுவிழந்து காணப்படுகிறது.

கொரோனா வைரஸை கட்டுபடுத்த மத்திய, மாநில அரசு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதை தொடா்ந்து அவ்வப்போது தளா்வுகள் அறிவிக்கப்பட்டு கடைகள் திறக்கப்பட்டன, எனினும் பள்ளி, கல்லூாிகள், வழிபாட்டு தலங்கள், கடற்கரை, பூங்காக்கள், திரையரங்குகள், திருமண மண்டபங்கள் போன்றவை தொடா்ந்து மூடப்பட்டு உள்ளன. வழக்கமாக ஜீன் மாதம் முதல் வாரத்தில் பள்ளி, கல்லூாிகள் திறக்கப்படும் போது பாடப்புத்தகங்கள் கையேடுகள், நோட்டுகள், வினா விடைப்புத்தகங்கள் உள்ளிட்டவைகள் விற்பனை களைகட்டும், தற்போது ஊரடங்கால் விற்பனையாகததால் கடைக்காரா்கள் மிகுந்த கவலையில் உள்ளனா்.